ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்ப ஏற்படுத்தி இருக்க ‘வேட்டையன்’ படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம் . ’ஜெய் பீம்’ படத்தின் மூலமா தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின இயக்குநர் T.J.ஞானவேலும், நடிகர் ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’. இந்த படத்தோட கதை என்னன்னா? மோசமான ரவுடிங்கள துணிச்சலோடு என்கவுன்டர் செய்துட்டு வராரு பிரபல என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டான, எஸ்.பி அதியன், அதாவது நயகன் ரஜினிகாந்த். இது ஒருபுறம் நடக்க, மறுபுறம் என்கவுன்டருக்கு எதிரானவராவும், அதைக் கடுமையா எதிர்ப்பராவும் இருக்காரு ஓய்வுபெற்ற நீதிபதியான சத்யதேவ், அதாவது அமிதாப் பச்சன்.
இந்த நிலையில போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி ரஜினிக்கு ஒரு லெட்டர் எழுதி நியாயம் தேட நினைக்கும் கவர்ண்மெண்ட் டீச்சரை மர்ம நபர் ஒருத்தவன் கொலை செய்றான், இந்தக் கொலையை செஞ்சது யார் என்பதை கண்டுபிடிச்சி, அவனை உடனடியா என்கவுன்டர் செய்ய முடிவு செய்கிறார் ரஜினி, ஒரு வேளை அவன் ஒரு நிரபராதியா இருந்தா அடுத்து என்ன ஆகும்-ன்றதுதான் இந்த படத்தோட மீதி கதை.
முக்கியமா என்கவுன்டருக்கு பின்னால் நடக்குற விஷயங்கள போகிற போக்குல பேசாம அதை ஆழமா விவரிச்சி பேசியிருக்கும் விதமும் அருமைஎன்று சொல்லணும். முதல் பாதியில ஒரு சில யூகிக்க கூடிய காட்சிகள் இருந்தாலும் அடுத்து என்கிற ஆர்வத்தையே ஏற்படுத்துது. அதே மாதிரி சட்டத்துக்கு முன்ன எல்லோரும் சமம், மனித உரிமை, BUDS LAW, கல்விய தொழிலா மாத்தி கொள்ளையடிக்கும் கோச்சிங் கொள்ளை என்று கதையோட போக்குலேயே கிளாஸ் எடுக்கும் விதமும் சிறப்பு.‘தாமதமா வழங்கும் நீதி அநீதி’என்ற மாதிரி, அதிவேகமா, தீர விசாரிக்காம கொடுக்கும் தண்டனையும் தவறானதுதான்னு காட்டுவது சிறப்பு. அது மட்டுமா இந்த படத்துல இரத்தம் தெரிக்கும் காட்சிகள் எதுவுமே இல்லாததும் மேலும் சிறப்புதான்.
அடுத்து ரஜினியோட வழக்கமான ஸ்டைல் நடை, கண்ணாடிய தூக்கிப் போட்டு மாட்டுவது சில செய்கைகள் அட்டகாசம். அதே போல செய்த தவறுக்காக குற்ற உணர்ச்சியில் உழலும் ரஜினி அந்த காட்சிகளில் சைலெண்டா ஸ்கோர் செய்கிறார்.
ரஜினிக்கு அடுத்தபடியா, படம் முழுக்க தன்னோட வசீகர நடிப்பால கவர்வது பேட்ரிக் கதாபாத்திரம்தான் அதாவது ஃபஹத் ஃபாசில்தான். படம் முழுக்க அவர் அடிக்கும் கவுன்டர்கள் நிஜமாவே ரசிக்க வைக்குதுன்னே சொல்லணும். அடுத்து சொல்லணும்னா ஓய்வுபெற்ற நீதிபதியா வர அமிதாப் பச்சன், இவரும் தன்னோட தேர்ந்த நடிப்பால் ரசிகர்கள ஈர்க்கிறாரு அதுவும் ரஜினிக்கு ஈக்வல் கதாபாத்திரத்திற்கு சரியான சாய்ஸ் இவர்தான் அதை மறுக்கவும் முடியாது. முக்கியமா இந்த படத்துல துஷாரா விஜயன், ரித்திகா சிங்-ன்னு ரெண்டு பேருக்குமே நல்ல வலுவான கதாபாத்திரம்.
படத்துல வீணடிக்கப்பட்ட கதாபாத்திரம் அது மஞ்சு வாரியர்தான். இந்த படத்துல அவருக்கு பெருசா எந்த வேலையுமில்ல. அதேமாதிரி வில்லனா வர ராணாவுக்கான காட்சிகளும் கொஞ்சம் வலுவா எழுதப்பட்டு இருக்கலாம், அனிருத்தோட பிஜிஎம்மும், பாடல் இசையும் மிக அருமை, மொத்ததுல இந்த படத்துல குறைகள் ஒன்று, இரண்டு இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி படம் பேசியிருக்க கருத்துகள் மிக முக்கியமானதே. நாட்டுக்கு தேவை, விரைவான நீதியே தவிர அவசரமான நீதி இல்லை தோளுரித்து சொல்லுவது, அதேமாதிரி சுவாரஸ்யமான திரைக்கதையோடு என்கவுன்ட்டர்கள் பத்தியும், தரமான கல்வி பத்தியும் உரக்க பேசியிருக்க இந்த படம் சிறப்பாவே வந்திருக்கு.