ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் படம், ‘ஸ்வீட் ஹார்ட்’. ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாசலம், பவுஸி, சுரேஷ் சக்ரவர்த்தி நடிக்கின்றனர். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். காதலை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுளளது. இந்நிலையில், டைட்டிலுக்கான காணொளி பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது.