மகள் கல்யாணத்தை நல்ல விமர்சையாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மகளின் அப்பாவான எம்.எஸ் பாஸ்கர். கல்யாணத்தை நடத்துவதற்காக தன்னுடைய நிலத்தை வேல ராமமூர்த்தியிடம் அடமானம் வைக்கிறார். குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க போகும் நேரத்தில் எம்.எஸ் பாஸ்கர் காணாமல் போகிறார். இதனால் அவரது மனைவியான ஸ்ரீரஞ்சினி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார்.
இந்த வழக்கை கதாநாயகனான தமன்குமார் எடுத்து விசாரிக்கிறார். அச்சூழ்நிலையில் அடுத்ததாக தமன் குமாருக்கு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்னின் வழக்கும் வருகிறது. இந்த இரண்டு சம்பவங்களிலும் தமன்குமார் உண்மையை கண்டறியும் முயற்சியில் இறங்க, அடுத்தடுத்து எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கிறது. உண்மையில் இரண்டு சம்பவங்களிலும் நடந்தது என்ன? அந்த இளம் பெண்ணின் கொலைக்கு காரணம் என்ன? எம்.எஸ் பாஸ்கருக்கு என்ன ஆனது? என்பதே மீதிக் கதை.
படம் முழுக்க தமன் குமாரின் போலீஸ் விசாரணையில் பயணிக்கும் நிலையில் அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் வேல ராமமூர்த்தி, பழ. கருப்பையா, தீபா ஷங்கர், எம் எஸ் பாஸ்கர், டீக்கடைக்காரர், சலூன் கடைக்காரராக நடித்தவர்கள் என அத்தனை கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வழங்கி உள்ளார்கள்.
ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையே புரட்டிப் போடும் என்ற அடிப்படை தத்துவத்தை கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மணிவர்மன். படம் முழுக்க விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து இருக்கிறார். குற்றம் செய்தவர்கள் யார் தான் என்ற கேள்வியுடன் பார்ப்பவர்களை யோசைனையில் ஆழ்த்தி சச்பன்ஸ் திரில்லராக இயக்கியிருக்கிறார் மணிவர்மன்.
கிளைமாக்ஸ் காட்சிகளில் எல்லா டிவிஸ்ஸ்டுகளையும் ஒன்றிணைந்த புள்ளி மிகவும் திறமையாக கையாண்டுள்ளார் இயக்குனர். படத்தின் விறுவிறுப்புக்கேற்ப ஒளிப்பதிவை மிக அழகாக ஒளிப்பதிவை கையாண்டுள்ளார் கே.ஜி ரத்தீஷ், சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை கேட்கும் ரகம்.