Fri. Oct 4th, 2024
Spread the love

நடிகர் சாருஹாசனை வைத்து ‘தாதா 87’ திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பில் ‘ஹரா’ மற்றும் அமலா பால் சகோதரர் அபிஜித் பால் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்டவற்றை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நடிப்பில் உருவாக்கிய ‘பவுடர்’ படம் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளிடமிருந்து பாராட்டுகளை பெற்றது.

தற்போது ‘பவுடர்’ திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி இணையவாசிகள் மற்றும் இன்றைய தலைமுறையினரின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தை திரையரங்குகளில் மீண்டும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

‘பவுடர்’ படத்தில் மனைவியிடம் திட்டு வாங்கும் கணவனாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி நடித்துள்ள காட்சிகள், குறிப்பாக பணம் கிடைத்தவுடன் அதிகாலையில் மனைவியை ஷாப்பிங்கிற்கு அழைக்கும் காட்சி, ரசிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளது. வையாபுரி மற்றும் அனித்ரா நாயர் தந்தை-மகளாக தோன்றும் சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் இதயங்களை தொட்டுள்ளன. ‘பவுடர்’ திரைப்படத்திற்கு பிறகு லியோ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்க வையாபுரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு காவல் துறை அதிகாரியாக மிகவும் தேர்ந்த நடிப்பை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ‘பவுடர்’ திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். சினிமா நிகழ்ச்சிகளில் பல வண்ண உடைகளில் அவரை பார்த்தவர்கள் காக்கி சீருடையில் ‘பவுடர்’ படத்தில் அவர் கலக்குவதை வெகுவாக ரசித்து வருகின்றனர்.

சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள ‘பவுடர்’ படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

‘பவுடர்’ குழு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – விஜய் ஸ்ரீ ஜி

இசை – லியாண்டர் லீ மார்ட்

ஒளிப்பதிவு – ராஜபாண்டி

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

படத்தொகுப்பு – குணா

கலை இயக்குநர் – சரவணா

சண்டைக்காட்சி – விஜய்

உடைகள் – வேலவன்

புகைப்படங்கள் – ராஜா

சவுண்ட் ஸ்டுடியோ – சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ

ஒலி வடிவமைப்பு – பிரேம்குமார்

ஒலிக்கலவை – நவீன் ஷங்கர்

டிஐ வண்ணம்: வீரராகவன்

வடிவமைப்பு – ஜி டிசைன்ஸ்

தயாரிப்பு மேலாளர் – சரவணன்

தயாரிப்பு நிறுவனம் – ஜி மீடியா

தயாரிப்பாளர் – ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்

ஆடியோ லேபிள் – டிவோ

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *