நடிகரும், டப்பிங் யூனியன் உறுப்பினருமான அப்புக்குட்டி தற்போது ஒரு தோழன் ஒரு தோழி, வாழ்க விவசாயி, போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பொன்னி மோகன் அடுத்து இயக்கும் ஜீவகாருண்யம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் டப்பிங் யூனியன் தலைவராக மீண்டும் தேர்வானா டத்தோ ராதாரவி சமீபத்தில் கோர்ட் தீர்ப்பால் இடிக்கப்பட்ட டப்பிங் யூனியன் கட்டிடத்தை, மீண்டும் அதே இடத்தில் புதிதாக கட்டித் தருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டப்பிங் யூனியன் தலைவராக தேர்வான ராதாரவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் அப்புக்குட்டி, யூனியனுக்கு ராதாரவி தலைமையில் புதிய கட்டிடம் விரைவில் அமைவது உறுதி என்றார்.
.