Thu. Dec 5th, 2024
Spread the love

கடந்த 1999ம் ஆண்டில் இயக்குனர் சரண் இயக்கித்தில் வெளியான படம் அமர்க்களம். இந்த படத்தில் தான் நடிகர் அஜித், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்தார்கள். இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது. மேலும், பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதனையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தமிழ் பட ஹீரோயினாக இருந்து வந்த ஷாலினி நடித்த படம் அனைத்தும் ‘ஹிட்’ ஆகியது. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்க ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர். ஆனால், அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில், தற்போது அஜித்- ஷாலினிக்கு காதல் திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி கொண்டாடினர். இவர்கள் ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25-வது ஆண்டு காதல் திருமணத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். .

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *