Sun. Oct 6th, 2024
Spread the love

மார்ச் 14, பட்டாம்பூச்சி நாளான இன்று அதனை வரவேற்கும் வகையில் பட்டாம்பூச்சி பாடல் ஒன்றை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது பா மியூசிக். மதன் கார்க்கியின் வரிகளில் உருவான குழந்தைகளுக்கான பட்டாம்பூச்சி பாடல் வண்ணமயமான குழந்தைகளின் உலகில் பட்டாம்பூச்சியின் வருகை எத்தனை அழகைக் கூட்டும் என்பதைப் இந்த பாடல் உணர்த்துகிறது. குதூகலம் மிக்க குழந்தைப் பருவத்தில் ஒரு சிறுமி தன்னையே சோலையாக்கி ஒரு பட்டாம்பூச்சியை விளையாட வரும்படி அழைப்பது போல் அமைகிறது பாடல். அனைவரையும் கவரும் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் பாப் புகன், பாடலை எஸ். ஜனின் ஸ்டீபனி பாடியுள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *