ரோஜின் தாமஸ் இயக்கும் புதிய மலையாள படத்தில் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர். ‘திகில்’ படமான இதற்கு கத்தனார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர். இந்த கதாபாத்திரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் பேய் கதாப்பாத்திரத்தில் ‘கள்ளியங்கட்டு நீலி’ ஆக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன. சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், அனுஷ்கா இருக்கும் ‘கத்தனார் – தி வைல்ட் சோர்சரர்’ படத்தின் வசீகரிக்கும் மோஷன் போஸ்டரை ஜெயசூர்யா பகிர்ந்துள்ளார். அதில் இந்த படத்தில் நடிக்கும் அனுஷ்காவை வரவேற்கிறேன் எனக் கூறி உள்ளார்.
மேலும் அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது. இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது. இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.