கடந்த 2022 ஜூன்-9ல், நயன்தாரா – விக்னேஷ்சிவன் இடையே காதல் திருமணம் நடந்தது. இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர். நயன்தாரா அடிக்கடி தனது கேமராவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள், மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். சமீபத்தில் இணையதளத்தில் கணவரை ‘அன்பாலோ’ செய்தது ரசிகர்கள் மத்தியில் பலவித வதந்திகள் பரவிய நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக ஒரு போட்டோவை இணைய தளத்தில் பகிர்ந்தார்.
இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவனுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்துள்ளார். வெளி நாட்டில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியாக ஒருவரை ஒருவர் அன்புடன் பார்ப்பது, நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதில் நயன்தாரா ஸ்கின்-பிட் பேண்ட்- கருப்பு நிற கோட் அணிந்து உள்ளார். விக்னேஷ் சாதாரண சிவப்பு டி-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து உள்ளார். இந்த படங்கள் இணைய தளத்தில் வெளியானதன் மூலம் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு நயன்தாரா பெரிய முற்றுப்புள்ளி வைத்து உள்ளார். தற்போது நயன்தாராவும், விக்னேஷும் சவுதி அரேபியாவில் விடுமுறைக்கு சென்று உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.