Sun. Oct 6th, 2024
Spread the love

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர், நேற்று இரவு காலமானார். இதையடுத்து மனோர் உடல் சென்னை குமரன்சாவடியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோகர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றியவாறே நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை மேடையேறியது 3500 முறைக்கும் மேல். அவற்றில், இவரே எழுதி, இயக்கி, நடித்தவை 6 – ஒவ்வொன்றும் 50 லிருந்து 70 முறை மேடையேறியவை. நகைச்சுவை மேலோங்கி நிற்கும் பாத்திரங்களே இவர் விரும்பி ஏற்பது. மேடையிலேயே நேரடியாய் பாடி நடிப்பது இவரது தனிச்சிறப்பு.

பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் நடித்துமுள்ள இவர் இதுவரை கிட்டதட்ட 15 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்; அவற்றில் இவரே எழுதி, இயக்கியவை 3; அவற்றிலும் இவருக்கு ‘அடடே மனோகர்’ என்ற செல்லப் பெயரை வாங்கித் தந்தது இவருடைய சிறந்த படைப்பான – தமிழ் பேசும் அனைவரையும் 1986 மற்றும் 1993ல் வாய்விட்டு சிரிக்க வைத்த – ‘அடடே மனோகர்’ தொடர்.

சுமார் 25 திரைப் படங்களிலும் நடித்துள்ளார். 9 வருடங்களுக்கு முன் தன் மனைவியை இழந்த இவருக்கு 3 பிள்ளைகள். தற்போது தன் 86 வயதான தாயாருடன் இவர் தனியே வசித்து வந்த நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார். திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *