Thu. Feb 13th, 2025
Spread the love

நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *