Mon. Oct 7th, 2024
Spread the love

நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரெக்கார்ட் பிரேக்’ . இப்படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் மார்ச் 8 அன்று வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகர் நிஹார்வுடன், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்

இயக்குநர், தயாரிப்பாளர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் பேசுகையில், “சென்னை விஜயா கார்டனில்தான் எனது சினிமா வாழ்க்கைத் தொடங்கியது. யாரும் இல்லாத கதாநாயகன் சிறுவயதிலிருந்து கிடைக்கும் வேலைகளை கஷ்டப்பட்டு செய்து வருகிறான். ஆனால், அவன் வளர்ந்து ஒரு விளையாட்டு ஆர்வத்துடன் போகும் பொழுது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மனிதர்களாக நாம் அனைவரும் இங்கு சமம். படத்தின் கதை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு. அதை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தை எனக்கு பிடித்த தமிழ் மக்களுக்கும் காட்டுவது ரொம்ப சந்தோஷம். மார்ச் எட்டு அன்று திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. என்றார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *