Sun. Oct 6th, 2024
Spread the love

இயகுனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் போர். இப்படம் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள Broadway மாலில் போர் திரைப்பட குழுவினர்களான இயக்குநர் பிஜோய் நம்பியார், நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், நடிகை சஞ்சனா நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தனர்:

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ், போர் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரவிருக்கிறது என தெரிவித்தார்.

தமிழில் நாங்கள் நடித்துள்ள்தாக தெரிவித்தார். கல்லூரி, கல்லூரி மாணவர்களின் சேட்டைகள் கதைகளம் கொண்டது என்றார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் காணுமாறு கேட்டுக்கொண்டார்.

அவரிடம் வில்லன் கதாபாத்திரம் கடினமாக உள்ளதா கதாநாயகன் கதாபாத்திரம் கடினமாக உள்ளதா என கேள்வி எழுப்பியதற்கு,

இரண்டும் கடினமானது எனவும் நல்ல கதாபாத்திரம் எது கிடைத்தாலும் செய்வேன் எனவும் இந்த படத்தில் நான் வில்லனா இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை என தெரிவித்தார்.

மக்கள் என்னை அன்பாகவும் ரசித்தார்கள் வில்லன் கதாபாத்திரத்திலும் ரசித்தார்கள் எனக் கூறியவர் பொதுமக்களை இதனை ஏற்றுக்கொள்கிறார்களோ அதனை தொடர்ந்து செய்வேன் என தெரிவித்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் வில்லன் கதாபாத்திரத்திற்கு அழைத்தால் அதுதான் லைன் அப் நெகட்டிவ் ரோலாக இருக்கும் என தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய உள்ளது குறித்தான கேள்விக்கு

பதில் அளித்த அவர் நடிகர் விஜய்க்கு ஆன்லைனில் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும், நன்கு யோசித்து தான் அவர் அந்த முடிவை எடுத்திருப்பார் எனவும் கூறினார். அரசியல் கட்சி துவங்கிய பின்பு படங்களில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு முதலில் அதிர்ச்சி அடைந்த அர்ஜுன் தாஸ், அவர் மீண்டும் திரைப்படங்களை நடிப்பார் என நம்பிக்கை உள்ளது எனவும் அவர்களது ரசிகர்களும் அதனைத் தான் விரும்புவார்கள் எனவும் என்னைப் பொறுத்தவரை அவரது படங்களை பார்த்தார் ஆசைப்படுவேன் எனவும் ஆனால் அது அவர் எடுத்த முடிவாக இருக்கலாம் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய நடிகர் காளிதாஸ் ஜெயராம் :

இது ஒரு கனவு போல் உள்ளதாகவும், இந்த படம் பல்வேறு விஷயங்களை தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துள்ளோம் என்றார். இந்த படத்தை பற்றி நினைக்கும் போதே பல்வேறு நல்ல நினைவுகள் தான் நினைவிற்கு வருவதாக தெரிவித்தார்.

விக்ரம் படத்தில் தன்னுடைய கதையும் அர்ஜுன் தாஸ் கதையும் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டது எனவும் ஆனால் இந்த படத்தில் ஒற்றுமையாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

பாவக்கதைகள் திரைப்படம் முடித்தவுடன் அது போன்ற சமூக அக்கறை உடைய படங்களை நடிக்க வேண்டும் என எண்ணி இருந்ததாகவும் ஆனால் நடிகர் மக்களுக்காக அனைத்து கதாபாத்திரங்களையும் நடிப்பதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய இயக்குநர், பிஜோய் நம்பியார் :

இந்த படம் கல்லூரி வாழ்க்கை சார்ந்த கதை எனவும் சமூக சார்ந்த கருத்துக்களும் இதில் அடங்கி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த படம் திரைப்பட அனுபவத்தை பூர்த்தி செய்யும் என்றார். இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த படத்தின் பெயர் போர் என்பதை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தான் இயக்குனர் மணிரத்தினத்துடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பணியாற்றும் பொழுது ஒரு காட்சிகளில் அதிகப்படியாக போர், போர்க்களம் என்ற வார்த்தையை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால் “போர்” என்ற பெயர் இந்த படத்திற்கு பொருந்தும் என எண்ணி அதனை வைத்ததாக பதில் அளித்தார். பின்னர் பேசிய நடிகை சஞ்சனா நடராஜன்:

சோலோ டேவிட் படங்களை எல்லாம் பார்க்கும் போது மிகவும் அற்புதமாக இருக்கும் எனவும், அதுபோன்ற படங்களில் எப்போதாவது நடிக்க மாட்டோமா என்று எண்ணியதாகவும், இப்படி பட்ட நேரத்தில் இந்த திரைப்படத்தில் எனக்கு இந்த கதாப்பாத்திரம் வேண்டுமென சண்டை போட்டு இந்த கதாபாத்திரத்தை வாங்கியதாக தெரிவித்தார். சார்பட்டா இரண்டாவது பாகம் வருவது என்பதே சமூக வலைத்தளங்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனவும் தற்போதைக்கு அது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் இந்த படத்திற்கும் மலையாள மொழிக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தமில்லை என கூறிய படக்குழுவினர் இந்த படத்தில் மலையாள மொழி பேசினாலும் அதற்கும் இந்த படத்திற்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தனர். மேலும் இந்த படத்தை தாங்கள் யாரும் பார்க்கவில்லை என நடிகர்கள் கூறினர். மேலும் பெரிய பட்ஜெட் படங்களால் மட்டுமே திரை துறை தொடர்ந்து செயல்படாது என தெரிவித்த அவர்கள் அனைத்து விதமான படங்களும் வரவேண்டும் எனவும் அனைத்து விதமான நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களும் வந்தால் தான் திரைதுறை வளர முடியும் என தெரிவித்தனர்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கான ஆதரவை மக்கள் அளித்தார்கள் என்றால், மிகவும் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும் பெரிய பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரித்துக் கொண்டிருக்க முடியாது எனவும் ஓரிரு சிறிய படங்களையும் தயாரித்தால்தான் புதிய இயக்குனர்கள் புதிய நடிகர்கள் கிடைப்பார்கள் எனவும் புதிய திறமைகளையும் நம்மால் கண்டறிய இயலும் என தெரிவித்தனர்.

அது போன்ற நிலைமையில் இருந்து வந்தவர்கள் தான் தற்பொழுது பெரிய பெரிய படங்களை இயக்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *