புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில், மலையாள இயக்குனர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட ராப்’. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது. இந்த நிலையில், ‘பேட்ட ராப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.