இளைஞர்களைக் கவரும் வகையில் கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ‘ருத்ரா’, கதை நாயகனாக அறிமுகமாகிறார், இப்படத்திற்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடிக்கிறார். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து வழங்க, டி கம்பெனி இணைத் தயாரிப்பில் இணைகிறது.
அமேசான் பிரைமில் மிகவும் பிரபலமான மாடர்ன் லவ் சென்னை என்ற வெப் சீரிஸுக்காக ‘காதல் என்பது கண்ணுலே ஹார்ட் இருக்குற எமோஜி’ எபிஸோடை இயக்கிய, முன்னணி விளம்பரப் பட இயக்குநரும், குணச்சித்திரக் கலைஞருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
தர்புகா சிவா இசையமைக்கும் இப்படத்திற்கு டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். பிரணவ் R படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ராஜேஷ் கலை இயக்கம் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாகத் துவங்கியது. சென்னை, கோவா மற்றும் இந்தியாவின் பல இடங்களில் படமாக்கப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.