நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. ‘லவ்வர்’ திரைப்படம் வருகிற 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ‘லவ்வர்’ படத்தில் இடம்பெற்றுள்ள 18 கெட்ட வார்த்தைகளை நீக்க வேண்டி தணிக்கை குழு படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழையும் தணிக்கை குழு வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.