Mon. Oct 7th, 2024
Spread the love

இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆங்கிலேயே நடிகை எமி ஜாக்சன். அதன்பின் தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்துத் , தெறி, தேவி, 2.0, சமீபத்தில் வெளிவந்த ‘மிஷன் சாப்டர் 1’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும், நடித்துள்ளார். சில வருடங்கள் மும்பையில் வசித்துத் வந்த எமி பின்னர் இங்கிலாந்திற்கே சென்றுவிட்டார். அங்கு ஜார்ஜ் பனாயிட்டோவ் என்பவருடன் திருமண நிச்சயம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே 2019ல் ஒரு ஆண்குழந்தைக்குத் தாய் ஆனார் எமி. சில வருடங்களுக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் எட்வட்டு வெஸ்ட்விக் என்ற ஆங்கிலேயே நடிகரை எமி காதலித்துத் வந்தார். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார் எமி. இந்நிலையில் எமி மற்றும் எட்விக் இருவரும் நிச்சயம் செய்து கொண்டதாக புகை ப்படங்களை வெளியிட்டு அறிவித்தனர். சுவிட்சர்லாந்து நாட்டில் பனி படர்ந்த மலை உச்சிச்யில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளனர். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் எமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *