கடந்த ஜன, 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘அயலான்’ படம் வெளியானது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் இந்த ‘அயலான்’ தான். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ‘அயலான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அயலா.. அயலா’ பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.