இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான படம் ‘ஹனு-மான்’. இதில் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரகனி, வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரிப்பில் ஜனவரி 12-ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. ‘ஹனு-மான்’ படத்தின் வசூலில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை அளிக்கப்படும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். அதன்படி இதுவரை, விற்கப்பட்ட ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ. 5 நன்கொடையாக ஒதுக்கீடு செய்தனர். பிரீமியர் ஷோக்களில் மட்டும் ரூ.14 லட்சத்து 85,810 அளித்தனர். தற்போது, 53 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த நிலையில், மேலும் ரூ.2.66 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.