Sun. Oct 6th, 2024
Spread the love

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாகி அதன் மூலம் பாலிவுட்டில் நுழைந்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மாறியவர். சமீபத்தில் இவரது ஆபாசமான போலி விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனாவின் உருவப்படம் “மார்ஃபிங்’ செய்யப்பட்டு பரப்பப்பட்ட டீப் பேக் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரித்தது.

டில்லி காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு 4 பிரிவுகளின் கீழ் கடந்த நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி விடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்தவரின் இணையதள முகவரியை வழங்குமாறு டில்லி காவல் துறை மெட்டா நிறுவனத்துக்கு அண்மையில் கடிதம் எழுதியது. தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பிகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரிடம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

இந்த விடியோவை அந்த இளைஞர் முதன் முதலில் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததும், பின்னர் மற்ற தளங்களில் பரவலாகி வைரல் ஆனதும் கண்டுபிடிக்கப்பட்டது, அவரது கணக்கில் இருந்து சமூக ஊடகங்களில் விடியோ முதலில் பதிவேற்றப்பட்டதால், அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தொடர் விசாரணையின் மூலம் நவம்பர் 10-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 465 (போலி செய்ததற்கான தண்டனை) மற்றும் 469 (நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66சி மற்றும் 66இ ஆகியவற்றின் கீழ் உளவுத் துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகளின் கீழ் டில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்தது.

இந்நிலையில், டெல்லியை சேர்ந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இவர் தான் ராஷ்மிகாவின் டீஃப் பேக் (Deep Fake) வீடியோவை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *