Mon. Oct 7th, 2024
Spread the love

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது. அதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பயோஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு காவேமிக்அரி ஒளிப்பதிவு செய்ய ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என பார்த்திபன் அறிவித்திருந்தார். அதன்படி இப்படத்திற்கு ‘TEENZ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *