Sun. Oct 6th, 2024
Spread the love

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. ஒரு காலத்தில் இரு மொழிகளிலும் குவிந்த பட வாய்ப்புகளால் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்த அனுஷ்கா, தற்போது கைவசம் ஒரு படம் கூட இல்லாமல் மார்க்கெட் இழந்து இருக்கிறார். அதற்கு அவரது வயது மற்றும் உடல் எடை கூடியதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி” படம் வெற்றி அடைந்தாலும் அடுத்து ஒரு படத்தில் கூட அவர் நடிக்க கமிட் ஆகவில்லை.

அனுஷ்கா 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். இவரைப்பற்றி காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக பாகுபலி படத்தில் நடித்த பின்னர் பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாக தகவல் பரவியது. அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் ஒருகட்டத்தில் இருவருமே அது வெறும் வதந்தி எனவும், தாங்கள் நல்ல நண்பர்கள் தான் எனவும் கூறி விளக்கம் அளித்தனர்.

பிரபாஸை தொடர்ந்து நடிகை அனுஷ்கா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என கூறப்பட்டது. பின்னர் தயாரிப்பாளர் ஒருவருடன் அனுஷ்கா நெருங்கி பழகி வருவதாகவும் பேச்சு அடிபட்டது. இப்படி அனுஷ்காவின் திருமணம் பற்றி பரவும் வதந்திகள் தொடர்ந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அது குறைந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், தற்போது அவரின் திருமணம் பற்றி மற்றுமொரு தகவல் பரவி வருகிறது.

அதன்படி நடிகர் பிரபாஸும், நடிகை அனுஷ்காவும் மீண்டும் காதலிக்க தொடங்கி இருப்பதாகவும். இவர்கள் இருவரது திருமண நிச்சயதார்த்தம் வருகிற மார்ச் மாதம் நடைபெறும் என்றும், ஏப்ரலில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனால் பிரபாஸ் – அனுஷ்கா காதல் மீண்டும் பேசுபொருள் ஆகி உள்ளது. இது உண்மையா இல்லை வழக்கம் போல் உருட்டா என்பது சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் மட்டுமே தெரியவரும்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *