Sat. Jan 18th, 2025
Spread the love

‘பேங் பேங்’, ‘வார்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’ (Fighter). இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். இந்தப் படம் ஹிருத்திக் ரோஷனின் முதல் 3D படம். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், அனில் கபூர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘ஃபைட்டர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்திய விமானப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் சீருடையில் மிருதுவாக தெரியும் ஹிருத்திக் ரோஷன் போர் விமானங்களை பறக்க விட்டு சாகச செயல்களில் ஈடுபடும்போது பார்வையாளர்கள் மூச்சடைத்துப் போவார்கள் என்பது நிச்சயம். ‘ஃபைட்டர்’படத்தின் டிரைலர் 2019-ல் புல்வாமா தாக்குதலின் பின்னணியை கதாபாத்திரத்தின் மூலம் காட்டுகிறது. இந்திய விமான படையின் தாக்குதலின் ஒரு பார்வையையும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கடினமான நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறது. மேலும் ‘ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் 3D imax வடிவத்தில் வெளியாகவுள்ளது. .

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *