கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. மீனாட்சி சவுத்ரி, லால், சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு சென்சார் குழு 'யு' சான்றிதழ் அளித்ததாக படக்குழு இன்று அறிவித்துள்ளனர்.