சென்னையில் பிறந்த தர்ஷா குப்தா “குக் வித்து கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் தான் பெரிய அளவில் புகழ்பெற்றார் என்றாலும் கூட கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே அவர் சின்னத்திரை நாடகங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் ஒரு நல்ல நடிகையாக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
அதே போல கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “முள்ளும் மலரும்” என்கின்ற தொடர் மூலம் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. தொடர்ந்து 2019ம் ஆண்டு ஒளிபரப்பான “மின்னலே” மற்றும் “செந்தூரப்பூவே” உள்ளிட்ட தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு தான் தர்ஷா குப்தாவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அவருடைய வாழ்க்கையில் பல மாற்றங்களையும் உயர்வுகளையும் ஏற்படுத்தியது.
இதனைத் அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் மோகன் இயக்கத்தில் வெளியான “ருத்ரதாண்டவம்” என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். அதே போல கடந்து 2022 ஆம் ஆண்டு வெளியான “ஒ மை கோஸ்ட்” என்கின்ற படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது “மெடிக்கல் மிராக்கிள்” என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், அந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
.