அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘கேப்டன் மில்லர்’ வருகிற ஜனவரி 12 அன்று வெளியாக உள்ளது.
இதனிடையே படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில், படத்தில் வரும் பல வசனங்களை தணிக்கை குழு நீக்கம் செய்துள்ளனர். இதில் கெட்டவார்த்தை வரும் வசனங்களை நீக்கம் செய்துள்ளதாகவும், வேலைக்கார நாய்கள் என்ற வசனத்தை நாய்கள் என மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்தில் மொத்தம் 14 இடங்களில் காட்சி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் 4 நிமிடங்கள் 36 வினாடி கட்சிகள் நீக்கப்பட்டு காட்சி நேரம் 2 மணி நேரம் 37 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.