2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா – சமந்தா ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக, 2021-ம் ஆண்டில் பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு சமந்தா நடிப்பில் பிசியாகி விட்டனர். ஆனால் அவரை தாக்கிய மயோசிடிஸ் நோய்லிருந்து தற்போது விடுபட்டு வரும் சமந்தா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்தநிலையில் நாக சைதன்யாவும், நடிகை ஷோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றுவது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷோபிதாவிடம், ‘நாக சைதன்யாவுக்கும், உங்களுக்கும் காதலாமே?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு ஷோபிதா பதிலளிக்கையில், “உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை. நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும்? எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையைப் பார்த்து சொல்வதே மேல்”, என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.