Sat. Oct 5th, 2024
Spread the love

2010 இல் சாமி இயக்கத்தில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து மைனா படத்தில் தனது எதார்த்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இவருக்கு தெய்வத் திருமகள், வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை அளித்தன.
விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார். இறுதியாக, அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’, ‘கிறிஸ்டோபர்’ படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. சில இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார் அவ்வபோது பயணங்கள் மேற்கொள்ளும் அமலா பால், கடந்த அக்.26இல் தனது பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டனர். கேரள மாநிலம் கொச்சியிலுள்ள விடுதியில் எளிமையான முறையில் அமலா பால் – ஜகத் தேசாய் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *