Sun. Oct 6th, 2024
Spread the love

சோஷியல் மீடியாக்களிலும் தனது புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக்கி, தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வந்த யாஷிகா, இதற்கிடையில் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து தற்போது குணமாகி, மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு பெரிய தமிழ் ஹீரோவை அப்பாவாக நினைத்ததாகவும் அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும் கூறியுள்ளார்.
‘ஆடிஷனுக்கு அழைத்திருந்தார். ஸ்கிரீன் டெஸ்ட் செய்துவிட்டு, எனது படங்களை எடுத்தார். பிறகு வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு அம்மாவிடம் பேசினார். வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார். அந்த சம்பவத்தின் மூலம் தான் சந்தித்த மன உளைச்சலில் இருந்து விடுபட்டேன். பின்னர் அவரால் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக அவரின் பெயரை வெளியிடவில்லை. இதுபோன்று ‘ஒருமுறை எனது வீட்டின் அருகே ஒரு போலீஸ்காரர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அவர் மீது புகார் அளித்ததையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்’ என யாஷிகா தெரிவித்துள்ளார்.
இவர் 6 வருடங்களுக்கு முன் நடித்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படம் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *