Sun. Oct 6th, 2024
Spread the love

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ மற்றும் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு படங்கள் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் இந்த படம் ரிலீஸ் இல்லை என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கனவே பொங்கல் தினத்தில் மகேஷ் பாபு, ரவி தேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மற்றும் பிரசாந்த் வர்மா ஆகிய ஐந்து பெரிய நட்சத்திரங்களின் தெலுங்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளதை அடுத்து ’அயலான்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. எனவே பொங்கல் கழித்து இரண்டு வாரங்கள் பின்தான் இந்த இரண்டு படங்களும் அங்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட மற்ற அனைத்து மாநிலங்களிலும் இரண்டு படங்களும் ஜனவரி 11ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *