Sun. Oct 6th, 2024
Spread the love

நடிகர் லியோ பிரபு காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் நேற்று மாலை 6 மணி அளவில் காலமானார். தனது மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்துள்ளார்.
பருவகாலம், இது எங்க நாடு, அண்ணே அண்ணே, நான் மகான் அல்ல, புதிர், பேர் சொல்லும் பிள்ளை, ரெண்டும் ரெண்டும் அஞ்சு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த அவர் ஒரு மூத்த நாடக ஆசிரியர், எழுத்தாளர். புகழ்பெற்ற பாய்ஸ் நடக நிறுவனத்தில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். எஸ்.வி.சகஸ்ரநாமம் போன்ற தமிழ் நாடகவியல் மேதைகளுடன் சேவா ஸ்டேஜ், ஒய். ஜி. பார்த்தசாரதி, பிரபு போன்றவர்களுடன் பல ஆண்டுகள் நாடகத் துறையில் பயணித்தவர். பின்னர் தனது சொந்த நாடகக் குழுவான ஸ்டேஜ் இமேஜை நிறுவி பல நாடகங்கள் அரங்கேற்றியுள்ளார். அத்துடன் பல தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்துள்ளார்.
இவரது கலைச்சேவையை கௌரவிக்கும் வகையில் 1990ஆம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி பாராட்டியது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *