அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்தநிலையில் இந்த வாரம் டிசம்பர் 29ஆம் தேதி படம் திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், ஆர்.எஸ். கார்த்திக், சாருகேஷ், சேனாதிபதி தர்மா, கோபி, சுதாகர், ஹரிஜா, ஆஷிக் உசேன், நந்தகோபால கிருஷ்ணன், அப்துல் லீ, ஜாங்கிரி மதுமிதா, ஜார்ஜ் மரியன், முனிஷ்காந்த், ரித்விகா, சந்தோஷ் பிரியன், ஷா, விஜய் குமார் ராஜேந்திரன், சத்தியமூர்த்தி என பெரிய நடிகர்கள் பாட்டாளிமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கௌஷிக் இசையமைத்துள்ளார். யாஷிகா ஆனந்த் மற்றும் ஹரிஜா ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கோபி மற்றும் சுதாகர் தனது நண்பர்களுடன் வசித்து வருகின்றனர். அவர்களில் இரண்டு பேர் இயக்குனர் ஆக முயற்சி செய்து வருகின்றனர். இப்படி நான்கு தனித்தனியாக இருக்கும் கும்பல் ஒரு திரையரங்கிற்கு படம் பார்க்க வருகின்றனர், ஆனால் அங்கு சிலர் அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கிறது. அதிலிருந்து தப்பித்து எப்படி வெளியே வருகின்றனர் என்பதை இந்த படத்தின் கதை. பேய் படத்தை தன்னுடைய ஸ்டைலில் காமெடியாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் வெங்கட். நிறைய யூடியூபர்களை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார், இந்த படத்தில் நடித்திருக்கும் பலர் தற்போது பிரபலமாக இருந்தாலும் படம் உருவான சமயத்தில் யாருமே பிரபலம் இல்லை. கோபி மற்றும் சுதாகரின் காமெடிகள் ஆங்காங்கே நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. எரும சாணி விஜய் மற்றும் ஹரிஜாவின் காட்சிகளும் நன்றாகவே வந்துள்ளது. யாஷிகா ஆனந்த் மட்டும் சற்று கிளாமராக படம் முழுக்க இருக்கிறார். முனிஷ்காந்த் வில்லனாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் சில இடங்களில் காமெடிகள் நன்றாக ஒர்க் ஆகி இருந்தாலும் ஒரு சில இடங்களில் சுத்தமாக எடுபடவில்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளாக பேய்களை வைத்து நிறைய காமெடி படங்கள் வந்து விட்டதால் கால தாமதமாக வந்து நிற்க்கும் இப்படம் ஒருவித சலிப்பை தட்டுகிறது. முதல் பாதி ஓரளவுக்கு தட்டு தடுமாறி கடந்து விட்டாலும், இரண்டாம் பகுதி நிறைய இடங்களில் நம்மை சோதிக்கிறது. கௌசிக்கின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தால் பேய் படத்திற்கு ஏற்ப பின்னணி இசையை கொடுத்துள்ளார். பெரிதாக லாஜிக் பார்க்காமல் பேய் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படம் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்.