Thu. Oct 3rd, 2024
Spread the love

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மூச்சுச் திணறல் காரணமாக, இம்மாதம் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சில நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மாலை மீண்டும் மூச்சுச் திணறல் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனை தான் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தே.மு.தி.க., வெளியிட்ட அறிக்கையில், ‛‛மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுச் திணறல் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *