சின்னத்திரையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றிய காஜல் பசுபதி, பின்னர் தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த சிந்துபாத் தொடர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர், இவர் பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பெரிய திரையில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து கள்வனின் காதலி, கோ, சிங்கம், இரும்பு குதிரை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடன இயக்குநர் சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்ட காஜல் பசுபதி, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இருவருக்கும் விவகாரத்தான நிலையில், சாண்டி வேறொருவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. காஜல் பசுபதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், “இரண்டாவது திருமணம் முடிந்தது. திடீர் முடிவு. யாருக்கும் சொல்லமுடில” எனப் பதிவிட்டுள்ளார்.
ஆனால், அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பழையது என்றும், நம்பமுடியவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட நபர் குறித்த விவரத்தை காஜல் பசுபதி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.