Thu. Oct 3rd, 2024
Spread the love

சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இது பற்றிய செய்தியினை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, நேற்று பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர் மஹதி, இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குனர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குனர், ஆகியோர் இணைந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாடகி மஹதி பேசியதாவது, பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், சென்னையில் உட்புறமான மயிலை, தி. நகர் போன்ற இடங்களில் மட்டுமே நடக்கிறது. பரந்து விரிந்து நிற்கும் சென்னை நகரின் பல பக்கங்களில் இருக்கும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும், சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இவ்விழா 6 நாட்கள், வெவ்வேறு கலைஞர்கள் கலந்துகொள்ள மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது என்று பேசினார்.
இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா பேசியதாவது, ”ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் சீசன் 2, பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெறவுள்ளது. கடந்த சீசனைப் போல, நானும் நண்பர் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் கலந்துகொள்கிறோம். முதல் சீசன் பிரமாதமாக நடைபெற்றது. இரண்டாவது சீசன் இன்னும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது” என்று பேசினார்.
ஜீகே மீடியா நிறுவனம் சார்பில் சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சி இன்று முதல் ஜனவரி 1 வரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர் கே கன்வென்சன் செண்டர் அரங்கத்தில், பல முன்னணி பிரபல இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *