நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படம் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்–ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரம் தொப்பி அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவரது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.