‘அர்ஜுன்
ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, பாலிவுட்டில் ரன்பீர் கபூரையும், ராஷ்மிகா மந்தனாவையும் வைத்து இயக்கிய ‘அனிமல்’ வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு லிப் லாக் காட்சிகள், உள்ளாடையுடன் ரன்பீருடன் நடித்திருக்கும் காட்சிகள் என ஏராளமான அதிர்ச்சிகரமான
காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. கூடவே நடிப்புக்குத் தீனி போடும் காட்சிகளும் அதிகமிருக்கின்றன. இதைப் பார்த்து ராஷ்மிகாவுக்கு நடிக்கவும் தெரியும் என நெட்டிசன்கள் புகழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
இதனால் ‘புஷ்பா’ பட இயக்குநர் சுகுமார்
இப்போது தனது ’புஷ்பா 2’ல் ராஷ்மிகாவுக்காக ஏற்கனவே எழுதப்பட்ட
காட்சிகளை டிங்கரிங் செய்ய ஆரம்பித்திருக்கிறாராம். ‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கும்
ராஷ்மிகாவுக்கும் திருமணமான பின்பு நடக்கும் கதை என்பதால், அவருடைய கதாபாத்திரத்தை மெருகேற்றும் வேலைகள் இப்போது நடக்கிறதாம்.
இதற்கு ஹீரோ அல்லு அர்ஜுனும் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இதிலும் ‘ஏ’ராளம் தாராளமாக
இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்களாம். ராஷ்மிகா மந்தனா இன்னும் சில தினங்களில் அல்லு அர்ஜுனுடன் ஷூட்டிங்கில் இணைய இருப்பதால், இந்த பட்டி டிங்கரிங் வேலைகள் வேகமாக நடக்கிறதாம்.