தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இந்தியாவின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே நடிகையாக அறிமுகமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது இளையமகள் குஷி கபூர் தற்போது ‘த ஆர்ச்சிஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். சோயா அக்தர் இயக்கத்தில் அகஸ்திய நந்தா, குஷி கபூர், சுஹானா கான், வேதாங் ரைனா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படி முக்கியமான வாரிசு அறிமுகங்கள் நடிக்கும் இந்த படத்தின் பிரீமியர் காட்சி மும்பையில் நடைபெற்றது. ஷாருக்கான், கஜோல், அபிஷேக் ஐஸ்வர்யா ராய் உட்பட்ட பலரும் அவரவர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் குஷி கபூர் அவருடைய அம்மா ஸ்ரீதேவியின் 10 வருட பழைய முழு நீள கவுனை அணிந்து வந்தார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற விருது நிகழ்வில் அந்த கவுனை அணிந்திருந்தார் ஸ்ரீதேவி. அம்மாவைப் போலவே மகளும் அந்த ஆடையில் அழகாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.