Sun. Dec 22nd, 2024

டெலிவிஷன் விருந்து

Spread the love

ஜீ தமிழ் ‘சந்தியா ராகம்’ இனி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர்களில் ஒன்று ‘சந்தியா ராகம்’. தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான இந்தத் தொடர் இன்று முதல், இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரின் நாயகிகளில் ஒருவராக, தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தாரா. அவர் இந்த தொடரில் இருந்து தனிப்பட்டக் காரணங்களுக்காக வெளியேறிவிட்டார். அவருக்குப் பதிலாக பாவனா லஸ்யா என்ற தெலுங்கு நடிகை நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ராதிகா நடிப்பில் புதிய தொடர் “தாயம்மா குடும்பத்தார்”

நடிகை ராதிகா சரத்குமார், தன்னுடைய ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி, செல்வி, அரசி, வாணி ரானி உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் சித்தி-2 சீரியலை விட்டு பாதியிலேயே விலகினார். அதன்பின் கலைஞர் மற்றும் விஜய் டிவியில் சில சீரியல்களை தயாரிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் அவர் தற்போது புதுப்பொலிவுடன் ஹெச்டி தரத்தில் மீண்டு வந்திருக்கும் பொதிகை தொலைக்காட்சிக்காக ’தாயம்மா குடும்பத்தார்’ என்ற புதிய தொடரை தயாரித்து நடிக்கிறார். மேலும், இதில் சந்திரமுகி படத்திலும், குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரகர்ஷிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தாயம்மா குடும்பத்தார் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

பாரதி புகழ் பேசும் “மகாகவி பாரதி” புதிய தொடர்.

பொதிகை தொலைக்காட்சியில், சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை தொடர் மகாகவி பாரதி என்கிற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது. 26 பாகங்கள் கொண்ட இந்த தொடரை உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் தயாரிக்க, லதா கிருஷ்ணா இயக்குகிறார். பாரதியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டரான இசைகவி ரமணன் வசனம் எழுதி, பாரதியாகவும் நடித்திருக்கிறார். காத்தாடி ராமமூர்த்தி, ஓய் ஜி மகேந்திரா உள்பட மேலும் பலர் நடித்திருக்கும் ”மகாகவி பாரதி” தொடர் வரும் 21 ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பிக்பாஸ்க்கு விருந்து அளித்த கமல்!

விஜய் டிவி வழங்கும் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகப்படுத்தி யாரு டைட்டில் வின்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்த சீசனில் யாரும் எதிர்பாராத விதமாக வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகினார். மேலும், இரண்டாவது இடத்தை மணி மற்றும் மூன்றாவது இடத்தை மாயா பிடித்தார்கள். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் குழுவிற்கு விருந்து கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

பிக்பாஸ் 7-வது சீசன் நிறைவு, முதல் இடத்தை எட்டிப் பிடித்தார் விஜே அர்ச்சனா!

விஜய் டிவியின் பிக்பாஸ் 7-வது சீசன் நிறைவு பெற்றது . மிகுந்த வரவேற்பைப் பெற்ற இப்போட்டியில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை, விசித்ரா, மாயா, நிக்சன் உள்பட 23 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினர். ஒரு மாதம் கழித்து அர்ச்சனா, தினேஷ், அன் பாரதி, கானா பாலா, பிராவோ ஆகிய 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்தனர். இதனால், இந்த சீசன் பெரிதாகக் கவனிக்கப்பட்டது.

இறுதிச்சுற்றில் அர்ச்சனா, மாயா, விஷ்ணு, மணி, தினேஷ் ஆகியோர் போட்டியிட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் மணிக்குக் கிடைத்தது. பெரிதும் கவனிக்கப்பட்ட மாயா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

Aruvi Serial - Time change

முடிவுக்கு வரும் பிரபல தொடரால், நேரம் மாறும் அருவி தொடர்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் உள்ளது. அதன் அடிப்படையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் டி.ஆர்.பி.யில் முதல் இடத்தை பிடித்துவிடுகின்றன.

அந்தவகையில், 2022 ஆண்டு முதல் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் பிரியமான தோழி. இத்தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் விக்கி ரோஷன், சான்ரா பாபு, தீப்தி ராஜேந்தர் ஆகியோர் பிரதான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரியமான தோழி தொடர் முடிவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடரின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரியமான தோழி தொடர் நிறைவடையவுள்ளதால், அருவி தொடர் பகல் 1மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.