தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தனது 98-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அறிமுக இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி இயக்கும் இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு புத்தாண்டு தினத்தினமான இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.