Wed. Sep 3rd, 2025
18 மைல்ஸ் - thiraiosai.com18 மைல்ஸ் - thiraiosai.com
Spread the love

‘பேச்சுலர்’ படப்புகழ் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், திங்க் மியூசிக் உருவாக்கத்தில், நடிகர்கள் அசோக்செல்வன், மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ளது ’18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் சமீபத்தில் திரையிடப்பட்டது.

இந்த பாடலின் கவிதைத்துவமான மனதை வருடும் உணர்வுகளுடன் கூடிய ’18 மைல்ஸ்’ஸின் பல புரோமோக்கள் வெளியாகி கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. பாடலில் கதை இடம்பெற்ற 15 நிமிட புரோலோக் காட்சிகள் ’18 மைல்ஸ்’ கதையின் காதல், நம்பிக்கை, மீண்டு வருதல் போன்ற உணர்வுகள் பற்றிய பார்வையை வழங்கியதோடு உற்சாகத்தையும் அதிகப்படுத்தியது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இயக்குநர்கள் ‘பூ’ சசி மற்றும் அஸ்வத் மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, நடிகர்கள் கிஷன் தாஸ் மற்றும் கீர்த்தி பாண்டியன் என திரைத்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற பல பிரபலங்கள் ’18 மைல்ஸ்’ புரோலாக் செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்டனர். இவர்களுடன் ’18 மைல்ஸ்’ (தாரணா) படக்குழுவினரான அசோக் செல்வன், மிர்ணா மேனன், இயக்குநர் சதீஷ் செல்வகுமார், இசையமைப்பாளர் சித்து குமார், தயாரிப்பாளர் சந்தோஷ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் தூரத்தால் பிரிக்கப்பட்ட ஒரு ஜோடியின் உணர்ச்சிகள், போராட்டங்கள், காதலுக்கான தடைகள் மற்றும் நம்பிக்கைகளை ’18 மைல்ஸ்’ பேசுகிறது. புதிய கருத்து, இதயப்பூர்வமான கதைசொல்லல் மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பிற்காக பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்கள் என இரு தரப்பிடமிருந்தும் ’18 மைல்ஸ்’ பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

புதுமையான கதை சொல்லல் மற்றும் வலுவான கதை சொல்லல் மூலம் ’18 மைல்ஸ்’ நிச்சயம் பார்வையாளர்களின் மனதில் இடம் பெறும்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *