நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசன் அவரது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இவர் கூலி திரைப்படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் அமீர் கானுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் பேசும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்து கூலி படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்களான ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர் இடம் பெற்றுள்ளனர்.
கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்
Spread the loveசின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர் (வயது 46). இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன்

க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’
Spread the love நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ கதாநாயகன் நகுலை மாற்றியது ஏன்? -‘ தி டார்க் ஹெவன்: இயக்குநர் பாலாஜி பதில்!

மலையாள திரையுலகில் நுழைந்த நடிகர் டிஎஸ்கே
Spread the love ‘பாம்’ படத்தில் பாசிடிவான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வரும் நடிகர் டிஎஸ்கே. மலையாள திரையுலகில் நுழைந்த நடிகர் டிஎஸ்கே ; பிரித்விராஜின் நண்பனாக நடிக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் தீவிர

தணல் : விமர்சனம்
Spread the loveகாவல்துறையில் புதிதாக கடைநிலைக் காவலர்களாக சேரும் நாயகன் அதர்வா உள்ளிட்ட 6 பேர் ரோந்து பணிக்கு அனுப்பபடுகிறார்கள். அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம்

குமார சம்பவம் : விமர்சனம்
Spread the loveபாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன் தங்கராஜ் நடித்த ‘குமார சம்பவம்’ படம் விமர்சனம். சமூக பிரச்சினைகளுக்காக போராடி வரும் குமாரவேலுக்கு, வாடகைக்கு வீடு கொடுத்து நெருங்கிய நண்பராகிறார் ஜி.எம்.குமார். ஆனால் குமாரவேலுக்கும்,

பிளாக்மெயில் : விமர்சனம்
Spread the loveஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கும் பிளாக்மெயில். ஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள ‘பிளாக்மெயில்’ துரோகம், பேராசையில் சிக்கித் தவிக்கும் அதிரடி த்ரில்லிங் கடத்தல்