பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியானது வணங்கான் திரைப்படம். வணங்கான் ஆக்ஷன் நாடகத் திரைப்படம் B ஸ்டுடியோஸின் கீழ் பாலா எழுதி, இணைத் தயாரித்து, இயக்குகிறார், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் சுரேஷ் காமாட்சி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷ்னி பிரகாஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இன்று 10 வருடங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியானது வணங்கான் திரைப்படம். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேப்போல் படத்தின் முதல் காட்சியை குடும்பத்துடன் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது மிகவும் எமோஷனலாகவும் மகிழ்ச்சியாகவும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அருண் விஜய்க்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. அருண் விஜயின் நடிப்பை வெகுஜன மக்கள் பாராட்டி வருகின்றனர். இதுப்போல் ஒரு கதாப்பாத்திரத்தில் அவரின் திரைப்பயணத்தில் நடிக்காதது குறிப்பிடத்தக்கது.
என்னை அறிந்தால் படத்தில் இருந்து 10 வருட தொடர் முயற்சியின் பலனாக இந்த படத்தின் வெற்றி அருண் விஜய்-க்கு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அருண் விஜய் இதேப் போல் வெற்றி திரைப்படம் அமைய வாழ்த்துகிறோம்.