Mon. Feb 3rd, 2025
@iamsakshiagarwal,thiraiosai.com@iamsakshiagarwal,thiraiosai.com
Spread the love

காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார். மேலும் மாடலிங்கிலும் அசத்தி வரும் இவர் அடிக்கடி தனது விதவிதமான போட்டோக்களை வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சத்தமின்றி திடீர் திருமணம் செய்துள்ளார். சாக்ஷி தனது பள்ளிக்கால நண்பரான நவ்னீத் என்பவரை திருமணம் செய்துள்ளார். கோவாவில் உள்ள தனியார் ஓட்டலில் இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்க இவர்களின் திருமணம் நடந்துள்ளது அதுதொடர்பான போட்டோக்களை சாக்ஷி வெளியிட்டு, “இந்த நாளை ஒரு கனவு போல் உணர்கிறேன். எனது சிறந்த நண்பரும் தோழருமான நவ்நீத்தை திருமணம் செய்து கொள்வதுதான் எங்களின் என்றென்றும் கதையின் ஆரம்பம்'' என குறிப்பிட்டுள்ளார்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *