கடந்த ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
விடுதலை 2 திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாகத்திற்கும் இளையராஜா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் திரைப்படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிற்கு அனுமதியளித்துள்ளது. இதனால் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கவுள்ளது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இப்படமும் முதற் பாகத்தை போலவே மாபெரும் வெற்றியை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.