கடந்த 2023 ஆண்டில் நடிகர் ஜி.வி பிரகாஷ், கவுரி கிஷன், வெங்கட் பிரபு மற்றும் பலர் நடித்து வெளியான படம் “அடியே”. விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கினார். இவர் தனது அடுத்த படைப்பை துவங்கியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம், ஜனனி ஐயர், சோபியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ‘ஹாட் ஸ்பாட்’ என பெயர் வைத்துள்ளனர். இப்படம் ஒரு ஹைப்பர் லின்க் படமாக இருக்கும் எனவும், நான்கு தனிபட்ட கதைகள் இதில் அமைந்துள்ளது எனவும், ஒவ்வொரு கதையும் அதற்கென தனிபட்ட தன்மையை கொண்டு இருக்கும் என இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். கோகுல் பினாய் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சதிஷ் ரகுநாதன் மற்றும் வான் படத்திற்கு இசையமைத்து இருக்கின்றனர். கே.ஜே.பி. மற்றும் 7 வாரியர் ஃபில்ம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். மார்ச் 29 ஆம் தேதி ஹாட் ஸ்பாட் படம் வெளியாக உள்ளது.