இரண்டு நெருங்கிய நண்பர்கள் இடையே உருவாகும் பிரச்னை போராக மாறி அவர்கள் உடன் இருப்பவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதே படத்தின் கதை.
இப்படம் இந்தியில் வெளியான டாங்கோ என்ற படத்தின் தழுவலாகத்தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கலாச்சார நிகழ்ச்சியின் போது தங்கள் கல்லூரிக்காக மாணவர்கள் இடையே வெடிக்கும் ஈகோ பிரச்சனையை இந்த படம் வெளிப்படுத்தி இருக்கிறது.
காதல் – போட்டி – மோதல் – வருத்தம் – வலி – பழி – பிரிவு – காமம் – ஏமாற்றம் – துரோகம் – பகை – என படம் முழுவதும் அடுக்கடுக்காக சொல்லப்படுகிறது. ஆனால் அனைத்தும் தேவைக்கு மீறி ஓவர் டோஸ் ஆகிவிட்டது.
இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் ஒருவருக்கொருவர் மோதி கொள்கிறார்கள். படம் முழுக்க பிளேபாயாக வலம் வந்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். மேலும் படத்தில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளையும் பேசி இருக்கிறார்.
அர்ஜுன் தாஸ் எப்போதும் போல நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இன்றைய கலாச்சாரம் எவ்வாறு ஒரு மோசமான நிலையில் செல்கிறது என்பதை காட்டும் விதமாக போர் படம் அமைந்துள்ளது. பிளஸ் என்னவென்றால் இப்போது உள்ள இளைய தலை முறையினருக்கு பிடிக்கும்படி இருக்கும்.
அதோடு முதல் பாதியை விட இரண்டாவது பாதி நன்றாக உள்ளது. படத்திற்கு மைனஸாக அமைத்தது மோசமான கெட்ட வார்த்தை இடம் பெற்று இருந்தது. மேலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க முடியாது.