தி லெஜண்ட் படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா. இவர் இன்று தங்க முலாம் பூசப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள கேக்கை வெட்டி தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் இந்த கேக்கை ஊர்வசிக்கு பரிசளித்துள்ளார். ஊர்வசி தற்போது பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து ‘செகண்ட் டோஸ்’ என்கிற மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.3 கோடி மதிப்புள்ள 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை யோ யோ ஹனிசிங் பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்து கூறிய யோ யோ ஹனிசிங், “அவரது பிறந்தநாளை சிறப்பு நிகழ்வாக மாற்ற அவருக்கு தனித்துவமான பரிசு வழங்க முடிவு செய்தேன். அதற்காக அவருக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேக்கை பரிசாக வழங்கினேன். எந்த நடிகரும் அவரது சக நடிகருக்கு செய்யாத இந்த சிறப்பான தருணம் வரலாற்றில் இடம் பெற வேண்டும். ஊர்வசி வேலையில் மிகவும் புத்திசாலி. மேலும் இந்த பரிசுக்கு அவர் முழுவதும் தகுதியானவர்” என்று கூறினார்.