இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வணங்கான்’. இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.