நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘லால் சலாம் படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ரொம்ப பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். லைகா நிறுவனம், இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய அடுத்த படமான ‘வேட்டையன்’ படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிந்து விட்டது. இன்னும் 20 சதவிகித படப்பிடிப்பு மட்டுமே உள்ளது. அது முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கும்’ என்று தெரிவித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் மற்றும் விஷாலின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘சாரி, அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க் வேண்டாம், என செய்தியாளார்களிடம் தெரிவித்தார்.